வடக்கு மக்களின் கண்ணீரைத் துடைத்து- வளமான எதிர்காலத்தை வழங்குவோம்- மோடி!!

வடக்கு மக்­க­ளின் கடந்த காலக் கண்­ணீ­ரைத் துடைத்து, பிர கா­ச­மான – வளமான – எதிர்­கா லத்துக்கு அழைத்­துச் செல்­வோம். இந்த விட­யத்­தில் இலங்­கை­யு­டன் இணைந்து பணி­யாற்­று­வ­தில் இந்­ தியா மகிழ்ச்சி அடை­கின்­றது. இவ்­வாறு இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி தெரி வித்­தார்.

இந்­திய அர­சின் 22.5 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் நிதி­யு­த­வி­யு­டன் வடக்கு மாகா­ணத்­துக்கு 1990 ‘சுகப்­ப­டுத்­தும்­சேவை’ இல­வச நோயா­ளர் காவு­வண்­டிச் சேவையை நாடு முழு­வ­தும் ஆரம்­பித்து வைக்­கும் நிகழ்வு யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மைதா­னத்­தில் நேற்று மாலை இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வின்போதே தலைமை அமைச் சர் நரேந்­திர மோடி புது டில்­லி­யி­ லி­ருந்து நேர­டிக் காணொலி அழைப்­பி­னூ­டாக உரை­யாற்­றி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, இந்து சமுத்­தி­ரத்­தில், தெற்­கா­சி யப் பிராந்­தி­யத்­தில் இலங்கை எங்­க­ளின் நட்­புக்­கு­ரிய நாடு என்­ப­தை­யும் தாண்டி நம்­பிக்­கைக்­கு­ரிய நாடு. இலங்­கை­யின் இன்ப துன்­பங்­க­ளில் இந்­தி­யாவே முத­லில் பங்­கெ­டுக்­கின்­றது.

இலங்­கைக்­கான இந்­திய அபி­வி­ருத்­தி­யில் இன்­றைய நிகழ்வு முக்­கி­ய­மான மைல்­கல். 2015ஆம் ஆண்டு இலங்­கைக்கு நான் பய­ணம் மேற்­கொண்­ட­போது, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விடுத்த கோரிக்­கைக்கு அமை­வா­கவே ‘சுகப்­ப­டுத்­தும் சேவை’ நோயா­ளர் காவு வண்­டிச் சேவை இலங்­கை­யில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இந்­தத் திட்­டத்தை இன்று வடக்­கில் ஆரம்­பிப்­ப­தில் மகிழ்­சி­ய­டை­கின்­றேன்.

வடக்கு மக்­கள் கடந்த காலங்­க­ளில் துன்­பங்­கள் துய­ரங்­க­ளைச் சந்­தித்­த­வர்­கள். அவற்­றைத் துடைத்­தெ­றிந்து வள­மான எதிர்­கா­லத்­தைப் பெற்­றுக் கொள்­ள­வேண்­டும். இலங்­கை­யின் எல்லா மக்­க­ளுக்­கும் அபி­வி­ருத்தி கிடைக்­க­வேண்­டும்.

இலங்­கைக்கு நான் இரண்டு தட­வை­கள் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­தேன். யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்த முத­லா­வது இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நான்­தான்.

மகாத்மா காந்தி இலங்­கைக்கு 1926 ஆம் ஆண்டு வருகை தந்­தி­ருந்­தார். யாழ்ப்­பா­ணத்­துக்­கும் வந்­தி­ருந்­தார். அவர் இங்­கி­ருந்து புறப்­ப­டும்­போது கூறி­யதை நான் இங்கே குறிப்­பிட விரும்­பு­கின்­றேன். இலங்­கையை வேறு நாடாக உண­ர­வில்லை என்று மகாத்மா காந்தி கூறி­ய­தையே நானும் கூறு­கின்­றேன். இலங்கை மக்­கள் அனை­வ­ரை­யும் இந்­தி­யா­வுக்கு அழைக்­கின்­றேன். புதிய இந்­தி­யாவை நேரில் வந்து பாருங்­கள் – என்­றார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க

இந்த நிகழ்­வில் உரை­யாற்­றிய தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தில் வெற்றி பெற்­றுள்­ளீர்­கள். வாழ்த்­துக்­கள். இதே­போன்­ற­தொரு நில­மையை நானும் சில காலங்­க­ளுக்கு முன்­னர் எதிர்­கொண்­டி­ருந்­தேன் என்று சிரித்­துக் கொண்டு தெரி­விக்க, இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி­யும் புன்­மு­று­வல் பூத்­தார்.

பலாலி வானூர்தி நிலை­யம், காங்­கே­சன்­துறை துறை­முக அபி­வி­ருத்தி, மத்­திய அதி­வேக நெஞ்­சாலை உள்­ளிட்ட பல்­வேறு அபி­வி­ருத்­தி­க­ளில் இந்­திய அர­சு­டன் இணைந்து செயற்­ப­டு­கின்­றோம். இந்­தி­யா­வு­ட­னான எங்­க­ளது அய­லு­ற­வா­னது தனித்­து­வ­மா­னது. 22.5 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் செல­வில் நோயா­ளர் காவு­வண்­டிச் சேவையை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிதியை வழங்­கிய இந்­திய மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கின்­றேன் – என்­றார் ரணில்.

இந்­திய எதிர்­கட்­சி­க­ளால், இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடிக்கு எதி­ராக இந்­திய மக்­க­ள­வை­யில் (நாடா­ளு­மன்­றில்) நேற்று முன்­தி­னம் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­டி­ருந்­தது. அதில் நரேந்­திர மோடி வெற்றி பெற்­றி­ருந்­தார்.

இதே­போன்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக, நாடா­ளு­மன்­றில் முன்­வைக்­கப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தில், ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெற்றி பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஹர்ச டி சில்வா

இந்த நிகழ்­வில் உரை­யாற்­றிய இரா­ஜாங்க அமைச்­சர் ஹர்ச டி சில்வா, 2015ஆம் ஆண்டு இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மோடி இலங்­கைக்கு வந்­த­போது, இந்­தத் திட்­டத்­துக்­கான இணக்­கம் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. தென் மற்­றும் மேல் மாகா­ணத்­தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் நோயா­ளர் காவு வண்­டிச் சேவை இந்­திய அர­சின் நிதி உத­வி­யில் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

கடந்த ஆண்டு இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மோடி இலங்­கைக்கு வந்­த­போது, நோயா­ளர் காவு வண்­டிச் சேவையை இலங்கை முழு­வ­தற்­கும் விரி­வாக்­கு­வ­தற்கு கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. அதற்கு அமை­வாக, 15 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­களை இந்­திய அரசு வழங்­கி­யது. நோயா­ளர் காவு வண்­டிச் சேவை­யில் பணி­யாற்­றும் இளை­யோ­ருக்­கான பயிற்சி இந்­தி­யா­வில் வைத்து வழங்­கி­யது.

தெற்­கில் ஆரம்­பிக்­கப்­பட்ட நோயா­ளர் காவு வண்­டிச் சேவை ஊடாக இது­வரை 85 ஆயி­ரம் பேர் உயிர் காக்­கப்­பட்­டுள்­ள­னர். 30 குழந்­தை­கள் நோயா­ளர் காவு வண்­டி­யில் பிறந்­துள்­ள­னர். அழைப்­புக் கிடைத்த 2 செக்­க­னி­லேயே நோயா­ளர் காவு வண்டி உரிய இடத்­துக்­குச் செல்­கின்­றது. மேற்­கு­லக நாடு­க­ளில் கூட இவ்­வா­றான நிலை இல்லை. நோயா­ளர் காவு வண்­டிச் சேவைக்­கு­ரிய பணத்தை இந்­திய அர­சும், மக்­க­ளும் முற்று முழு­தாக நன்­கொ­டை­யாக இலங்கை மக்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ள­னர்.

இந்­தச் சேவை10யாக இந்­தி­யா­வின் புல­னாய்­வுப் பிரி­வி­னர் இலங்­கை­யில் காலூன்­ற­வுள்­ள­தா­க­வும், இந்­தச் சேவை தேவை­யற்­றது என்­றும் சிலர் கூறி­னர். ஆனா­லும், இந்­தச் சேவையை நாம் நடத்­து­வோம். இல­வ­ச­மான இந்­தச் சேவை­யூ­டா­கப் பலர் பய­ன­டைந்து கொண்­டி­ருக்­கின்­ற­னர். இந்­தச் சேவைக்கு தேவை­யற்ற அழைப்­புக்­களை சிலர் ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர். ஆனா­லும், பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் பயன்­பெ­று­கின்­ற­னர் – என்­றார்.

தமி­ழி­ழி­லும், சிங்­க­ளத்­தி­லும்
உரை­யாற்­றிய நரேந்­திர மோடி

சுகப்­ப­டுத்­தும் சேவை நோயா­ளார் காவு­வண்­டிச் சேவையை தொடக்கி வைக்­கும் நிகழ்­வில் காணொலி ஊடாக நேர­லை­யில் உரை­யாற்­றிய இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி தமி­ழி­லும், சிங்­க­ளத்­தி­லும் உரை­யாற்­றி­னார். ஆரம்­பத்­தில் ‘ஆயு­போ­வன்’, ‘வணக்­கம்’ என்று கூறி­னார். தொடர்ந்து, இலங்கை வாழ் சகோ­தர சகோ­த­ரி­க­ளுக்கு வாழ்த்­துக்­கள் என்று குறிப்­பிட்­டார். இத­னைச் சிங்­கள மொழி­யில் கூறிய பின்­னரே, தமிழ் மொழி­யில் நரேந்­திர மோடி குறிப்­பிட்­டார்.

இந்­தி­யா­வி­லி­ருந்தே
நிகழ்வை தொடக்­கிய
நரேந்­திர மோடி

இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி மற்­றும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இரு­வ­ரும் இணைந்து ‘சுகப்­ப­டுத்­தும் சேவை’ நோயா­ளர் காவு வண்­டிச் சேவையை தொடக்கி வைத்­த­னர். தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மைதா­னத்­தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த மேடை­யில் உள்ள ஆழியை போட்­டார். சம­நே­ரத்­தில், இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி, தனது பணி­ய­கத்­தி­லி­ருந்து காணொலி ஊடாக உரை­யாற்றி முடித்த பின்­னர், அங்­குள்ள ஆழியை அழுத்­தி­னார்.

யாழ்ப்­பாண மாந­கர சபை மைதா­னத்­தில் பச்சை விளக்­கு­கள் இதன்­போது ஒளிர்ந்­தன. இரண்டு நோயா­ளர் காவு­வண்­டி­கள் ஒலி எழுப்­பிக் கொண்டு அங்­கி­ருந்து புறப்­பட்­டன. தலைமை அமைச்­சர்­க­ளைத் தொடர்ந்து, இரா­ஜாங்க அமைச்­சர் ஹர்ச டி சில்­வா­வும், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னும் ஆழியை அழுத்தி சேவையை ஆரம்­பித்­த­னர்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மைதா­னத்­தில் நடந்த இந்த நிகழ்­வில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சோ.சேனா­தி­ராசா, ஈ.சர­வ­ண­ப­வன், எம்.ஏ.சுமந்­தி­ரன், சி.சிறீ­த­ரன், செல்­வம் அடைக்­க­ல­நா­தன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நா­தன், திரு­மதி சாந்தி சிறீஸ்­கந்­த­ராசா ஆகி­யோர் பங்­கேற்­றி­ருந்­த­னர்.

வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், வடக்கு மாகாண அமைச்­சர்­க­ளான ஜி.குண­சீ­லன், திரு­மதி அனந்தி சசி­த­ரன், க.சிவ­நே­சன் ஆகி­யோ­ரும், பிரதி அவைத் தலை­வர் வ.கம­லேஸ்­வ­ரன், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான விந்­தன் கன­க­ரட்­ணம், கேச­வன் சயந்­தன், இ.ஜெய­சே­க­ரன், எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், சி.அகி­ல­தாஸ் ஆகி­யோ­ரும் பங்­கேற்­றி­ருந்­த­னர்.

நிகழ்­வில் ஆரம்­பத்­தில் சிங்­கள மொழி­யில் இலங்கை தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது. தொடர்ந்து இந்­திய தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது. நிகழ்­வின் முடி­வில் தமிழ் மொழி­யில் இலங்­கை­யில் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.