பயங்கரவாதிகள் மேலும் பல தாக்குதல்களுக்கு திட்டம்;அமெரிக்கா எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேலும் பல பாரியளவிலான தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் இன்று ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கான பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நீடிப்பதாகவும், தாக்குதல் சதிகாரர்கள் நாட்டுக்குள் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல்தாரிகளின் செயற்பாடு முற்றாக முடக்கப்படவில்லை என்பதனை உறுதிபடுத்துவதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாகவும், தாக்குதல் திட்டமிடல்கள் நடைபெற்று வருவதாக தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.