சஹ்ரானின் குண்டு தயாரிக்கும் முகாம் மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் கண்டுபிடிப்பு!

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவரான சஹ்ரானின் முக்கிய முகாமொன்றை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மட்டக்களப்பு காட்டுப்பகுதியில் இருந்து இதனை கண்டுபிடித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மட்டக்களப்பு ரிதிதென்ன ஓமடியாமடுவிலுள்ள காட்டுப்பகுதியிலேயே குண்டுகள் தயாரிக்கும் முக்கிய முகாமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகாவலி வலயத்திற்குட்பட்ட அரச காணியொன்றை வேறொருவரின் பெயரில் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த பகுதியில் முகாம் அமைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய குண்டுகளை அவ்விடத்தில் தான் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.

இதேளை, குறித்த காட்டுப்பகுதியலுள்ள வீட்டில் திருத்த வேலைகள் அண்மையில் இடம் பெற்றமைக்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளது.

அவ்விடத்தில் பதுங்குகுழியொன்று அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் கைதுசெய்யப்பட்ட சஹ்ரானின் வாகன சாரதியான கபூரின் நெருங்கிய சகாவான 48 வயதுடைய ஆதம் லெப்பை காதர் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையிலேயே குறித்த குண்டு தயாரிக்கும் முகாம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.