பொலிஸ் நிலைய காவலில் சொகுசு வசதியுடன் இருக்கும் கைதி

வவுனியா கனகராயன் குளம் பொலிஸ் நிலையத்தினரால் கடந்த 4 ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்ட தாவூத் உணவக உரிமையாளர் சகல வசதிகளுடனும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

கனகராயன் குளம் பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த தாவூத் உணவக உரிமையாளருக்கு ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படாத வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

குறித்த சந்தேக நபர் ஒரு சிறைக்கைதி போல் இல்லாமல் காவலிலுள்ளவருக்கு தலையணை, கைத்தொலைபேசி, சுடுதண்ணிப் போத்தலில் தேனீர் என்பன சிறைக்கூடத்தில் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு இவ்வாறான வசதிகள் எந்த அடிப்படையில் செய்து கொடுக்கப்பட்டது என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.