வாகன உரிமை குறித்த தகவல்களுக்கான இணைய சேவை ஆரம்பம்

vehiclesவாகன உரிமை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட சில சேவைகளை இணையத்தின் ஊடாக பாவனையாளர்களுக்கு வழங்கும் முறை இன்று (03) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஆகியன இணைந்து இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.

இதற்கமைய, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து, வருமான பத்திரம், காலாவதி மற்றும் பாவனைக் காலம், வாகனங்களின் இறுதிப் பதிவு இலக்கம் உள்ளிட்ட தகவல்களை இந்த சேவையின் ஊடாக அறிந்துகொள்ளலாம்.

வாகனங்களின் தகவல்களை பெற்றுக்கொள்ளும் போது, குறிப்பிட்ட சில தகவல்கள் இலவசமாக வழங்கப்படுவதுடன், விரிவான அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் திணைக்களத்திடம் அடையாளத்தை உறுதிப்படுத்தி, கடனட்டை மூலம் பணம் செலுத்த முடியும்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.