விஷேட உலங்குவானூர்தி மூலம் மோடி அநுராதபுரத்திற்குப் புறப்பட்டார்

2015-03-14இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அநுராதபுரம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்திற்குச் செல்லவுள்ளார்.

முதற்கட்டமாக அநுராதபுரம் செல்லும் பிரதமர் மோடி சற்று நேரத்திற்கு முன்னர் கொழும்பிலிருந்து விஷேட உலங்குவானூர்தி மூலம் புறப்பட்டார்.

அங்கு ஸ்ரீ மஹா போதி விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ள மோடி, அங்கிருந்து மன்னாருக்குச் செல்லவுள்ளவுள்ளார். இந்தியாவின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலான ரயில் பாதையையும் பிரதமர் மோடி திறந்துவைப்பார்.

அதனைதொடர்ந்து யாழப்பாணம் செல்லும் அவர் சென்று அங்கு பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். அத்துடன், வட மாகாண ஆளுநர் எச்.எம்.ஜீ.எஸ்.பளிஹக்காரவை சந்திக்கும் பிரதமர் மோடி, ஆளுநருடன் மதிய போசன விருந்திலும் கலந்துகொள்வார்.

அதனையடுத்து இன்று மாலை கொழும்பு திரும்பும் இந்­திய பிர­தமர் மோடி சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார்.

பின்னர் இலங்கைக்கான இந்திய தூதுவரின் இரவு விருந்துபசாரத்தில் பங்கேற்கவுள்ள இந்திய பிரதமர் இன்று இரவு புதுடில்லி நோக்கி பயணிப்பார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.