மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியில் வெள்ளம்!…

பொலன்னறுவையில் பெய்துவரும் கடும்மழை காரணமாக, மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியின் கல்லெல்ல பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீதியில் 4 அடி உயரத்தில் வெள்ளம் காணப்படுகின்றது. இதனால் வாகன போக்குவரத்து தடைப்பட்டிருப்பதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பொலன்னறுவை கல்லேல சுவசேன கம என்ற கிராமமும் சுதுநெலும் கம என்ற கிராமமும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. 

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.