அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதியுடன் பேச்சு!

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன், நேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு, நடத்தியுள்ளார்.

அதிகாரபூர்வ ருவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன், இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் நேற்று பேசினார்.

இந்த கலந்துரையாடலின் போது, அமெரிக்கா – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு நீண்ட வரலாற்றைக் கொண்டது என்று உறுதிப்படுத்தினார். இரு நாடுகளும், கொரோனா தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேட் ஓ பிரையனும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், கலந்துரையாடினர்.

இதன்போது, கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிராக போராடும் இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் வகையில், அமெரிக்க மக்கள் சார்பாக செயற்கை சுவாசக் கருவிகளை வழங்குவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆர்வமாகவுள்ளார் என்றும், ரொபேட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சுதந்திரமான வெளிப்படையான இந்தோ- பசுபிக் பிராந்தியத்துக்கு, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில், வலுவான நட்புறவு முக்கியமானது” என்றும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் ருவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.