கச்சதீவு

நெடுந்தீவின் மேற்குக் கரையிலிருந்து ஏறத்தாழ 12 மைல் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு தீவு கச்சதீவு. தென் இந்தியாவின் இராமேஸ்வரத்துக்கும், நெடுந்தீவுக்கும் நடுவே காணப்படும். இத்தீவு மூன்று முதல் நான்கு மைல் தூரத்திற்கு இடைப்பட்ட சுற்றளவு கொண்டது. கடற் கரையை அடுத்து மணல் நிலமும் கற்பாறைகளுமே காணப்படுவதால் இதைச் சுற்றிவர அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. இதன் நடுப் பகுதி பற்றைகளையும் சிறு மரங்களையும் கொடிகளையும் உடையது.

ஆதிகாலத்தில் இத்தீவில் தேவ குருவான வியாழ பகவானின் மகனும், அசுர குருவான சுக்கிரனின் மகள் தேவயாணியும் காதலித்து வாழ்ந்ததாக ஒரு கதையுண்டு. தேவ குருவின் மகனுக்குக் கசன் என்ற பெயராகையால் அவன் பெயரால் இத்தீவு என வழங்கப்படுவதாக ஒரு வரலாறு உண்டு.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.