குவைத், சவூதி சென்ற பெண்களில் ஆறு பேர் குழந்தைகளை பெற்ற பின்னர் நாடு திரும்பினர்

9273_maidsகுவைத் மற்றும் சவூதி அரே­பியா ஆகிய நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாகச் சென்று அங்கு பிறந்த ஆறு குழந்­தை­க­ளுடன் ஆறு இலங்கைப் பெண்­களும் அந் ­நா­டு­களில் கர்ப்­பி­ணி­க­ளான மூன்று பெண்­களும் மார்ச் மாதம் முதல் ஆறு நாட்­களில் இலங்கை திரும்­பி­யுள்­ளனர் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யக அதி­காரி தெரி­வித்தார்.

குவைத்­தி­லி­ருந்து நான்கு குழந்­தை­களும் சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து இரண்டு குழந்­தை­களும் தாய்­மா­ருடன் எடுத்து கொண்டு வரப்­பட்­ட­துடன் சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து இண்டு கர்ப்­பிணிப் பெண்­களும் குவைத்­தி­லி­ருந்து ஒரு கர்ப்­பிணிப் பெண்ணும் இவ்­வாறு நாடு திரும்­பி­யுள்­ளனர்.

சகல குழந்­தை­களும் ஆறு மாதங்­க­ளுக்கு உட்­பட்­ட­தாகும். இக் குழந்­தை­களில் ஒன்று கடந்த பெப்­ர­வரி மாதம் 3 ஆம் திகதி பிறந்­த­வை­யாகும். இப்­பெண்கள் அனை­வரும் 35 வய­துக்குக் குறைந்த, திரு­ம­ண­மாகி இரண்டு மூன்று குழந்­தை­க­ளு­டைய பெண்­க­ளாவர்.

சேவை நிலை­யத்தில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவர்­களில் இருவர் குழந்­தை­க­ளுடன் கடந்த 8 ஆம் திகதி அவர்­க­ளது குடும்­பத்­தி­னரின் விருப்பின் பேரில் தங்­க­ளது வீடு­க­ளுக்கு திரும்பிச் சென்­றுள்­ளனர்.

இப் பெண்­களில் இவர் இந்­நா­டு­களில் வீட்டு எஜ­மா­னர்­களால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாகி கர்ப்­ப­ம­டைந்­துள்­ள­துடன் மேலும் சிலர் தவறான தொடர்பு காரணமாக கர்ப்பமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி தெரிவித்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.