இந்தியா முட்டாள் தனமாக செயற்படுகிறதாம்!

1320457965Untitled-1ஈழம் உருவாகினால் அது இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமெனவும் இதனை புரிந்து கொள்ளாமல் இந்தியா முட்டாள்தனமாக செயற்படுகிறது எனவும், தேசப்பற்றுடைய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்று வழங்கப்பட வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் கோருகின்றார், 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறுகின்றார், ஈழம் வேண்டுமென வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரி வருகிறார் என, இங்கு கருத்து வௌியிட்ட அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நாட்டில் ஈழம் உருவாகினால் அது இந்தியாவிற்கு பாரியளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமெனவும் இதனை புரிந்து கொள்ளாமல் இந்தியா முட்டாள்தனமாக செயற்பட்டு வருகின்றது எனவும் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய அரசாங்கம் ஆட்சி அமைக்க, இந்திய உளவுப் பிரிவான றோ விஷேட வேலைகள் சிலவற்றை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடு ஐக்கியமான நாடு எனவும் அதிகாரப் பகிர்வு என்ற பேரில் நாட்டை பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாது எனவும் பெங்கமுவே நாலக்க தேரர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.