இந்திய றோளற் படகுகள் அத்துமீறல் தொடர்ந்தால் கடலில் மோதல் வெடிக்கும் வடமராட்சி மீனவர்கள் தெரிவிப்பு

DSC04361(1)இந்திய மீனனவர்கயின் அத்தமீறல் தொடர்ந்தால் கடற்ப்பரப்பில் மோதல் நடத்தவேண்டிய நிலை வரும்! எச்சரிக்கின்றனர் வடமராடசி மீனவர்கள்.

பருத்தித்துறைதொடக்கம் சுண்டிக்குளம் வரயான கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் றோளற் படகுகள் அத்து மீறல் பருத்தித்துறை மீனவர்களின் பல இலடச்;சம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்றிரவு (16.03.15) 9.30மணியளவில் வடமராட்சி கடல் பரப்பில் கரையில் இருந்து 5கிலோ மீற்றர் வரையான துரத்திலேயே இடம்பெற்றுள்ளது. 60 வரையான இந்திய றோளற் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் எமது கடற்ப்பரப்பிலேயே நாம் தொழிற்ச்செய்யமுடியாதுள்ளதாக பருத்தித்துறை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி வடமரர்சி மீனவசங்கங்களின் சமாசத்தலைவர் வஸ்தியாம்பிள்ளை இக்னேசியஸ்.அருள்தாஸ் தெரிவிக்கையில்:-

நேற்றிரவு கடற்தொழிலுக்குச் சென்றவர்கள் பலரின் படகுகளின் வலைகள் இல்லாது கரையை வந்தடைந்துள்ளனர்.
இது இன்று(17.03)காலை எனது நேரடி பார்வைக்கு வந்துள்ளது,இந்திய மீனவர்களின் றோளற் படகுகள் அத்துமீறி பருத்தித்துறை முதல் சுண்டிக்குளம் வரையான கடற்ப்பகுதியில் அதாவது எமது கரையிலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்திலேயே அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

அறுபதுக்கும் மேற்ப்பட்ட இந்திய றோளற் படகுகள் நேற்றிரவு எமது கடற்ப்பரப்பில் நுளைந்து எமது மீனவர்களின் பல இலடச்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை வெட்டி நாசம் செய்துள்ளனர்.5 கிலோ மீற்றர் தூரத்திலேயே தொழில் செய்யமுடியவில்லை என்றால் நாங்கள்; எங்கு போகமுடியும்.

இதன் போது மாஸ் மயூரன் என்ற மீனவரது 150,000 ரூபாய் பெருமதியான வலைகளும்,கொனிபாஸ் நேசன் எனற மீனவரின் 100,000 ரூபாய் பெறுமதியான வலைகளும் இந்தய றோளற் படகுகளால் வெட்டி நாசமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டைக்காடு,சுண்டிக்குளம் கடற்ப்பரப்பில் மிகவும் கரையை அண்டி, றோளற்ப்படகுகள் இரு தினங்களாக மீன்பிடியில் ஈடுபடுவதால் மிகமோசமான விளைவை இந்திய மீனவர்கள் சந்திக்கவேண்டி ஏற்ப்படும.;

இது தொடர்ந்தால் கடற்ப்பரப்பில் மோதல் நடத்துவோம் என்று கூறிய அவர் சில வாரங்களுக்கு முன் கட்டைக்காட்டு கடற்ப்பரப்பில் இடம்பெற்ற மோதலை நினைவுபடுத்தினார்.

எனவே இலங்கை,இந்திய அரசுகள் இது தொடர்பில் சுமுகமான முடிவொன்றை எடுக்கவேண்டுமென வடமராட்சி மீனவர்கள் சார்பில் வேண்டுகோள் விடுப்பதாக மீனவசங்க சமாசங்களின் தலைவர் வ.அருள்தாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.