
இந்திய பிரதமர் பிரிவினைவாதத்தை தூண்டுகின்றார் என விமல் வீரவன்ச தலைமயிலான ஜே.என்.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைக்கான விஜயத்தின் போது அவர் இவ்வாறு பிரிவினைவாதத்தை தூண்டியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே.என்.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென மோடி வலியுறுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் மோடி எதற்காக பிரிவினைவாதத்தை தூண்டுகின்றார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.