பெண்களை பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும்!

unnamed-363நான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக பதவியேற்று அந்தக் கதிரையில் அமர்ந்தது முதல் இன்று வரை நான் நேரடியாக சந்தித்த மற்றும் அவதாணித்த மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற அல்லது அங்கு வாழுகின்ற, செல்ல இருக்கின்ற பணிப் பெண்களது அவல நிலைகளை கேட்டு, கேட்டு நான் எனது அமைச்சில் இருந்து கொண்டு நாளாந்தம் கண்னீர் சிந்துகின்றேன்.
ஆனால் எனது ஆசை அடுத்த ஆண்டின் சர்வதேச பெண்கள் தினத்தை இந்த நாட்டில் கொண்டாடமால் இருக்க வேண்டும்.

காரணம் முதலில் இலங்கையில் இருந்து கிராமத்து பெண்களை பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதை இந்த நாட்டில் இருந்து தடுத்து நிறுத்தல் வேண்டும். அதுவே எனது ஆசை. இந்த நாட்டில் உள்ள ஏனைய பெண் அரசியல்வாதிகளும் உங்களைப் போன்ற பல்கழைக்கழக பெண் புத்திஜீவிகளதும் ஆசையாக இருந்து வருகின்றது. என தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி தலத்தா அத்துக்கோரலபல்கழைக்கழங்களில் பட்டம் பெற்ற பெண்கள் அமைப்பின் ஒன்றியம் இன்று நடாத்திய சர்வதேச பெண்கள் தினத்தினை பொரலையில் அவர்கள் தலைமையழுவலகத்தில் கொண்டாடினர். இவ் அமைப்பின் தலைவி இந்திரா தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி நட்டசா பாலேந்திரா, ; பிரதியமைச்சர் விஜயகலாவின் பிரத்தியோகச் செயலாளர் கேமா சன்முகசர்மா, சிரேஸ்ட ஊடகவியலாளர் ஆனந்தி பாலசிங்கம் ஆகியோறும் மற்றும் பெண் அமைச்சிக்களின் பிரதிநிதிகளும் உரையாற்றினார்கள்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பில் பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றும்போதே அமைச்சர் தலத்தா அத்துக்கோரல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் தலத்தா அத்துக்கோரல- இந்த நாட்டில் 1 மில்லியன் பெண்கள் மத்தியகிழக்கில் வாழ்கின்றனர். இவர்கள் 30- 40 ஆயிரம் ருபா மாதாந்த சம்பளத்திற்காக மத்திய கிழக்கில் தொழில் செய்கின்றனர். இந்த நாட்டின் பொருளாதாரத்தில் அன்நிய வெளிநாட்டுச் செலவணியை 9.2 வீதம் வெளிநாட்டு வேலைவாய்பினால் கிடைக்கப்பெருகின்றது. எமது பெண்கள் செல்லாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகள் வங்களதேசில் இருந்து வருடாந்தம் முறையாக பயிற்சியளித்து அவர்களது மதததிற்கேட்ப பணிப்பெண்களை எடுத்து வருகின்றது.
பணிப்பெண் வரிசையில் இலங்கை, வங்களதேஸ், இந்தோனிசியா பிலிப்பைன்ஸ் நாடுகள் பெண்களே பணிப்பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புகின்றது.

இந்தப் பெண்கள் பெரும்பாலோனோர் வறுமைக் கோட்டில் உள்ள கிராமாங்களான அனுராதபுரம், மற்றும் வட கிழக்கு, குருநாகள் பெருந்தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்களாவார். இவர்கள் தமது கிராமத்தில் இருந்து மாவட்டத்தின ;உள்ள பெரிய நகரத்திற்கே பஸ் ஏறிச் செல்லாத பெண்களாவர்.

உப முகாவர்கள் இரவோடு இரவாக கொழும்புக்கு இப் பெண்களை அழைத்து வந்து அவர்களை 2 – 3 நாட்களுக்கு கொழும்பில் தங்க வைத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டரீதியான தஸ்தவேஸூகளை தயாரித்து ஏற்றி விடுகின்றனர்.
இவர்களுக்கு நாம் எந்த நாட்டுக்குச் செல்கின்றோம். மொழி தொழில் பயிற்சி ஆகக்குறைந்தது அவர்கள் செல்லும் நாடுகளில் அந்த நாடுகளில் வழங்கும் அபாய துணியைக் கூட அணியக் கூடாதத் தெரியாதவர்களை அனுப்பி விடுகின்றனர்.

அவர்களை அங்கு உள்ள முகவர்கள் அங்கு மாதக்கணக்கில் தங்க வைத்து சிலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

வேறு, வேறு வழிகளில் அந்தப் பெண்களை பாவிக்கின்றனர். அது மட்டுமல்ல ஒவ்வொரு தூதுவர் ஆலயங்களில் பாதுகாப்பு வீடு என எமது அமைச்சில் அமைத்துள்ளது. அங்கு சட்டரீதியற்ற குழந்தைகளை வைத்துக் கொண்டும் சில பெண்கள் தமது குழந்தையுடன் நாட்டுக்கு வராமல் சிலர் உள்ளனர்.

சிலர் பிள்ளை பெறும் வரை கட்டுநாயக்க பாதுகாப்பு வீட்டில் தங்கி நின்று பிள்ளை பிறந்த உடன் அதனை விற்று விட்டு தமது கிராமத்திற்குச் செல்கின்றவர்களும் உள்ளனர்;. லெபணான், குவைத், துபாய் நாடுகளுக்குச் பணிப்பெண்களகாகச் சென்ற சில பெண்கள் அந்த நாட்டில் வேறு நாட்வர்களை சட்டரீதியாக மணந்து இந்த நாட்டினை விட்டு வராமல் அவர்களது கணவன், பிள்ளைகளை மறந்தவர்களாக கடந்த 20- வருடகாலமாக அங்கே வாழ்ந்து வருபவர்களாவும் உள்ளனர்.

இந்த அழகான உண்னதமான இலங்கையின் பெயர் இந்தச் செயல்களினால் உலக நாடுகளில் பெரிதும் இழுக்கான பெயருக்குச் இட்டுச் செல்கின்றது.தமது கணவன்மார்கள் 50-75 ஆயிரம் ருபாவை உப முகவர் கொடுத்தால் போதும் தமது மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்ப சம்மதிக்கின்றாhகள். அடுத்த 3 மாதத்துக்குள் வேலைவாய்ப்பு பணியகத்திற்குள் குழந்தைகளுடன் வந்து எனது மனைவியை எப்படியாவது நாட்டுக்கு அழைத்து தாருங்கள் என அமைச்சின் படிகளின் ஏறி ஏறி முறையிடுகின்றனர்.

இதனை அமைச்சினால் செய்ய முடியாது. அந்தந்த முகாவர்கள் பணம் வாங்கிவிட்டு 2 வருடம் ஒப்பந்தம் செய்தால் அவர்கள் நாட்டுக்கு அனுப்ப முடியாது எனக் கூறுகின்றனர். சில வீடுகளில் அரபுப் பெண்கள் இல்லை ஆண்களே அங்கு வாழுகின்றனர். அந்த வீட்டிற்குச் சென்று பொறிக்குள் மாட்டிக் கொண்டுள்ளனர்.

இதுதான் இந்த நாட்டின் பெண்களது நிலை. இந்த அரசின் 100 நாள் வேலைததிட்டத்தின் கீழ் ஆகக் குறைந்தது 12 வயதுக்கு மேற்ப்ட்ட குழந்தைகள் இல்லாதவர்களையே நாம் பணிப்பெண்களாக அனுப்ப அனுமதிக்க வேண்டும் என நான் சிபார்சு செய்துள்ளேன்.

ஆனால் எனது அமைச்சின் கீழ் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் 60 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழில் இடைநிறுத்தியுள்ளேன். அவர்கள் குழந்தை இருந்தும் 50 ஆயிரம் ருபாவை பெற்று குழந்தை இல்லை. என சிபார்சு செய்துள்ளனர் குழந்தைகளின் தாய்களை தவறான முறையில் வெளிநாடு செல்ல அனுமதித்துள்ளனர். என அமைச்சர் தலத்தா அத்துக்கோரல தெரிவித்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.