எம்மைப்பற்றி

ilankai.com தமிழர்களுக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய இணைய நாளிதழாகும். செய்திகள், அரசியல், வர்த்தகம், மருத்துவம், ஜோதிடம், ஆன்மிகம், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், மகளிர் பக்கம், தலையங்கம், பாமரன், மக்கள் பணியில், கவியரங்கம், கலாச்சாரம், வாசகர் பக்கம் மற்றும் சினிமா போன்ற பல அம்சங்களுடன் புதிய தொழில் நுட்பத்துடனும் நமது ilankai.com இணையதளம் இயங்கி வருகிறது.

“Forge the links stronger.” – MAHATMA GANDHI

Screen Shot 2015-03-15 at 11.38.00
Jaffna Youth Congress, then called the Students Congress. The Students Congress, Jaffna, stood for the revival of national arts and literature and for the attainment of self-government for the land.

Ever since the first session of the Students Congress in December, 1924, invitations were addressed to Mahatma Gandhi to bless this Youth Movement of Ceylon with his august presence and words of wisdom.

The month of October and November 1927 in Ceylon, were practically the Mahatma’s months.

The last few days of Gandhiji’s stay in Ceylon at Jaffna were the most thrilling. In Mahadev Desai’s words, “Jaffna students, it will be remembered, were the first to invite Gandhiji, and then the other friends took up the proposal.”

On the 26th morning a vast crowd poured into the Railway Station premises to pay their respects to Mahatma Gandhi on his first arrival in Jaffna.

Shri C. Rajagopalachari rendered the Mahatma’s speech into Tamil.

“Having come to Jaffna, I do not feel I am in Ceylon, but I feel that I am in a bit of India,” said Gandhiji. He again “Ever since I have come to Lanka the conviction has been growing upon me that I am not in Lanka but in India glorified. A glorified edition of India Lanka certainly is from a scenic point of view. Though I was prepared for the scenery in Lanka, the scenery I have actually witnessed has surpassed all my expectations and so I could not help saying at a recent meeting that Ceylon seemed to be a fragrant beautiful pearl dropped from the nasal ring of India. If the people of Lanka are really, as they should be, inheritors of the culture of India, they should also represent in their lives a glorious edition of Mother India.”

modi-keerimalai-(2)

2015 ம் ஆண்டு பங்குனி 13 -ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை நினைவுகூரும் முகமாக இலங்கை.com  தொடங்கப்பட்டது.

‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்ற நம்பிக் கையில் இலங்கை வந்தேன் – பாராளுமன்றில் நரேந்திர மோடி!

உலகம் அமைதியை உணர்வது யாழ்ப்பாணத்தில் இருந்துதான்! – யாழில் இருந்தே மோடி தெரிவிப்பு

“யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள எனக்கு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புதிய அடையாளத்தைக் காட்டுகின்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பௌதீகமான தொடர்புகள் மட்டுமின்றி, கலாசாசர ரீதியான விடயங்களில் ஒன்றுப்பட்டுள்ளது என்பதை எல்லோரும் அறிவார்கள்.

“தமிழர் ஒற்றுமை” (Tamil Unity) என்ற அடிப்படையில் தமிழர்கள் தங்களுக்கிடையிலான பேதங்களை மறந்து ஐக்கியப்பட வேண்டும். இது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முதல் அவசியமாகும். இதன் மூலமாகவே ஐக்கிய இலங்கைக்குள் நீங்கள் சமத்துவமாக வாழ முடியும்.

யாழ்ப்­பாண மக்­க­ளு­டைய வாழ்க்கை பாது­காப்­பா­ன­தா­கவும் சுகம் நிறைந்­த­தாக அமை­வ­துடன் இலங்கை மக்­க­ளு­டைய வாழ்க்கை பாது­காப்­புடன் அபி­வி­ருத்திப் பாதைக்கு இட்­டுச்­செல்ல வாழ்த்­துக்கள் கூறு­கின்றேன்.

இந் நிகழ்வு எனது இறுதி நிகழ்­வாக உள்­ளது. இலங்­கைக்­கான இரண்­டுநாள் பய­ணத்தின் நான் கலந்­து­கொண்ட நிகழ்வில் இது கண்ணீர் வர­வ­ழைத்த நிகழ்­வாக இது அமைந்­துள்­ளது.

இந்­தியப் பிர­த­ம­ராக நான் இருப்­ப­துடன் யாழ்ப்­பா­ணத்­திற்கு முதற்றட­வை­யாக வந்­த­தை­யிட்டு முதலில் மகிழ்ச்­சி­ய­டை­கின் றேன். நான் இங்கு வந்­தது வேறெந்த கார­ணத்­துக்­கா­கவும் அல்ல. யாழ்ப்­பா­ணத்தில் காலடி வைக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே ஆகும். யாழ்ப்­பாணம் ஓர் புதிய அடை­யா­ளத்தை காட்டி நிற்­கின்­றது. யாழ்ப்­பா­ணத்தின் இன்­றைய நிகழ்வின் மூலம் உல­கிற்கு புதி­யதோர் வாச­னையை அது தரக்­கூ­டி­ய­தாக அமைந்­துள்­ளது. இந்த நிகழ்வு எனக்கு புதிய உணர்­வையும் சிந்­த­னை­யையும் தரு­வ­துடன் மன­துக்கு திருப்­தி­யையும் சகோ­தரத் தன்­மை­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.

பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டிக்கு யாழ்ப்­பா­ணத்தில் வாழை தோர­ணங்­களை நாட்டி மகத்­தான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. வீதியின் இரு மருங்­கிலும் இலங்கை இந்­திய கொடி­களை அசைத்து மக்கள் தமது வாழ்த்­துக்­களை தெரி­வித்­தனர். பிர­தமர் மோடி மக்­களை பார்த்து கைய­சைத்த வண்ணம் சென்றார்.

ilankai.com மூலம் செய்திகளை உடனுக்குடன் உலக தமிழகளுக்கு கொண்டு செல்வது, நம் தமிழ் மொழியின் பெருமையை எடுத்துரைப்பது மற்றும் தமிழை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த அடிப்படையில், இலங்கைத் தீவில் தமிழ் மக்களினது பிரச்சினைகள், உணர்வுகள் மற்றும் அபிலாசைகள் தொடர்பில் நம்பகத்தன்மையானதும் சரியானதும் பகுத்தாய்வுக்குட்பட்டதுமான முறையில் தகவல் வழங்குவதற்கும் கருத்துருவாக்குவதற்குமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்வது மாத்திரமன்றி அரசியல், பொருளாதார, அபிவிருத்தி மற்றும் சமூக மாற்றம் ஆகிய நிகழ்முறைகளின் போது தொடர்ச்சியாக பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களை ஒரு தொடர்பாடல் மூலமான சமூக செயற்பாட்டினூடாக வலுவூட்டும் பொருட்டு அறிவுப் பரிமாற்ற சேவையினை மேற்கொள்வதுமே ilankai.com இணையத்தளத்தின் குறிக்கோளாகும்.

ilankai.com இணையத்தளமானது, தனது செய்தி தயாரிப்பு மற்றும் செய்தி ஆய்வு ஆகிய செயன்முறைகளின் போது, நேர்மை, துல்லியம் மற்றும் சமநிலை ஆகிய ஊடகவியல் நெறிமுறைகளின் பால் வலுவான பற்றுறுதியினை கொண்டிருக்கிறது.

modi-keerimalai-(3)

ilankai.com இணையத்தளமானது இலங்கையை தளமாகக்கொண்டு அனுபவமும், ஆற்றலும் தகைமையும் மிக்க ஒரு உலகளாவிய ஊடகவியலாளர்கள் வலையமைப்புடன் இயங்கி வரும் ஒரு சுயாதீன செய்திச் சேவையாகும். உலகம் பூராகவும் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள், அரசியல்வாதிகள், ராஜதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறுபட்ட அமைப்புக்களுக்கு தனது சேவையை ilankai.com வழங்கவிருக்கிறது.

எமது நோக்கம்: இலங்கைத் தீவு மற்றும் இதர இடங்களில் வாழுகின்ற தமிழ் மக்களை அடக்குமுறை, ஆதிக்கம், அநீதி மற்றும் சமூக கேடுகளில் இருந்து விடுவிக்கும் பொருட்டு அவர்களை சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார ரீதியில் அறிவூட்டப்பட்ட விழிப்புணர்வுநிலைமிக்க ஒரு சமூகமாக ஆக்குவதற்கான குரலாக இருத்தல்.

modi-keerimalai-(6)

எமது பணித்திட்டம்: நிகழ்வுகள், சம்பவங்கள் மற்றும் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசாரவிடயங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் தொடர்பாடல் மற்றும் கருத்து பரிமாற்றத்தை மேற்கொள்வதன் மூலம் மிகவும் வினைத்திறன் மிக்கதொரு தகவல் மற்றும் அறிவுப் பரிமாற்ற தளமாக இருத்தல்.

எமது ஆசிரியர் பீட கொள்கை

உண்மையை கண்டறிந்து அதனை அறிக்கையிடு.

சுயாதீனமாக செயற்படு

பொறுப்புகூறலுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்படு.

எமது தளத்திற்கு வருகை தருபவர்கள் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்தால் நாம் மேலும் எமது சேவையை மேலும் மேம்படுத்த அது வாய்ப்பாக அமையும்.

செய்திகளை உடனுக்குடன் படித்து பயன்பெறுங்கள் !

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.