அரச நிறுவனங்களின் 13 அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

ஊழல் மோசடிகள் குறித்து சுயாதீனமான விசாரணையை முன்னெடுக்கும் நோக்கில், அரச நிறுவனங்களைச் சார்ந்த 13 அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை கருத்திற்கொணடு இந்த நடவடிக்கை... Read more »

எவன்கார்ட்டிலுள்ள 2000 பேர் சட்டவிரோத இராணுவத்தினர் -பொன்சேகா

எவன் கார்ட் கம்பனியில் உள்ள மொத்த ஊழியர்கள் 4000 ஆயிரம் பேரில் 2000 ஆயிரம் பேர் இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக வெளியேறிச் சென்றவர்களேயாகும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இவ்வாறு வெளியேறுவோருக்கு எவரும் தொழில்வழங்க... Read more »

உரிமையாளர்கள் சட்டப்படி வந்தால் கட்டடங்களைத் தருகின்றேன்: டக்ளஸ் தேவானந்தா

தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களை நான் வைத்திருப்பதாக கூறுகின்றனர். அந்தக் கட்டடங்களை நீதிமன்றத்தின் ஊடாக கோரினால், அதனை நான் வழங்குவதற்கு தயாராகவுள்ளேன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஸ்ரீதர் திரையரங்கு எனது கட்சி அலுவலமாகவிருக்கின்றது.... Read more »

லஞ்சம் பெற்றுக்கொண்டு காடுகளை அழிக்க, சம்மதம் தெரிவிக்கும் பூவரசங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரி ராஜகுரு!

வவுனியா மாவட்டம் பூவரசங்குளம் – வன்னிவிளாங்குளம் வீதியானது, வவுனியா – மன்னார் – முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் பயணிக்கக்கூடிய மிகவும் முக்கியமான போக்குவரத்து வீதியாகும். வன்னித்தொகுதி என்று அழைக்கப்படும் இம்மூன்று மாவட்டங்களையும் இணைக்கும் இத்தரைவழிப்பாதையின் மையப்புள்ளியாக பூவரசங்குளம் எனும்... Read more »

டளஸ் பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அளகப்பெரும, பாரிய நிதி மோசடி விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட அரச ஊடகமொன்றுக்கு செலுத்த வேண்டியுள்ள விளம்பர கட்டணம் தொடர்பிலேயே அவர் விசாரிக்கப்படவுள்ளதாக,... Read more »

விருப்பு வாக்கு எண்ணும் பணிகளில் மோசடி – அருந்தவபாலன்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணும் பணிகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாக இலங்கை தமிழரசு கட்சியின் சாவகச்சேரி அமைப்பாளர் கந்தைய்யா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். வாக்களிப்புகள் நேர்மையான முறையில் இடம்பெற்றிருந்தன.... Read more »

நிதி மோசடி விசாரணைப்பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிப்பு!

ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிதி மோசடி விசாரணைப்பிரிவின் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரியளவில் நிதி மோசடிகள் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் புதிய அரசாங்கத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் இந்தப் பிரிவு நிறுவப்பட்டது.... Read more »

காசோலையை களவாடிய காவல்துறை அலுவலர் கைது

காவல்துறை அதிகாரிகளின் வேதனங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை களவாடியது தொடர்பில், காவல்துறை அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை காவல்துறை அதிகாரி காரியாலயத்தில் இருந்தே இந்த காசோலை களவாடப்பட்டதாக காவல்துறை ஊடகப்... Read more »

சஜின்வாஸ் குணவர்த்தன கைது

பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலக வாகனங்களை முறைகேடாக பாவித்தமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

500 மில்லியன் விவகாரம்: ரோஹிதவிடம் விசாரணை

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர், 500 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை எப்படி திரட்டினார் என்பது தொடர்பிலேயே இந்த விசாரணைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. Read more »