இலங்கை

0

ஜனாதிபதி தலைமையில் நான்காவது சர்வதேச யோகாதின நிகழ்வு

நான்காவது சர்வதேச யோகாதின அனுஷ்டிப்பு நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ரொறிங்டன் சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்றது. இந்திய உயர்ஸ்தானிகள் அலுவலகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. யோகா பயிற்சி தொடர்பான ஆலோசகர்கள் 15 பேருக்கு சான்றிதழும் இதன்போது ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தரஜித்...

0

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் ஆராய்வு

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸின் உபகுழு ஆராய்ந்துள்ளது. உலகலாவிய ஆரோக்கியம் உலகலாவிய மனித உரிமைகள்,மற்றும் சர்வதேச அமைப்புகள் தொடர்பான வெளிவிவகார அமைச்சின் குழுவே இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளது. இந்த அமர்விற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ்ஸ்மித் தலைமைதாங்கியுள்ளார். இலங்கையின் உள்நாட்டு...

0

ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் உதவும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து  அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையிலேயே அமெரிக்கா இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. இலங்கை அதிகாரிகளை நேற்று சந்தித்துள்ள அமெரிக்க தூதுவர் அதுல்கெசாப் இந்த உறுதியை...

0

குற்­ற­வா­ளி­க­ளுக்­குப் பாது­காப்­பு வழங்குகின்ற நாடாக இலங்கை!!

குற்­ற­வா­ளி­க­ளுக்­குப் பாது­காப்­பா­ன­தொரு நாடாக இலங்கை விளங்­கு­கின்­றது. கடந்த அர­சின் ஆட்­சிக் காலம் தொடக்­கம் இன்­று­வரை மேல் மட்­டத்­தில் ஏரா­ள­மான குற்­றச் செயல்­கள் இங்கு இடம்­பெற்­றுள்ள போதி­லும் குற்­ற­வா­ளி­கள் தண்­டிக்­கப்­பட்­ட­தற்­கான ஆதா­ரம் எது­வு­மில்லை. ஆனால் அத்­கை­ய­வர்­கள் அர­சுக்கு சவால் விடும் வகை­யில் நடந்து கொள்­வ­தைக் காண­மு­டி­கின்­றது. கடந்த ஆட்­சிக் காலத்­தில்...

0

மன்னாரில் புதிதாக கழுதைகள் மருத்துவமனை

தனியார் நிறுவனம் ஒன்றின் அனுசரனையுடன், தாயிலான் குடியிருப்பு மக்களும் இணைந்து மன்னாரில் புதிதாக நிர்மாணித்துள்ள கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் இன்று (21) காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, சின்னக்கரிசல், தாயிலான் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கழுதைகள் மருத்துவமனை...

0

’இலங்கையில் கற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள்’

இலங்கையில் இடம்பெற்ற 25 வருட உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு யுத்தகுற்றத்தில் ஈடுபட்டன என, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்த யுத்தக்குற்றங்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான சாட்சிகளுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித்...

0

நோர்வே இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் ஜென்ஸ் புரோலிக் ஹொல்ட் (Jens Frølich Holte) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் (20) இலங்கை வரவுள்ளார். இராஜாங்க அமைச்சர் இந்த விஜயத்தின்போது, சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இரு...

0

மலேசியா சிறையில் உயிரிழந்த முன்னாள் போராளி ஜீட் மயூரன்

மலேசியாவில் மரணமடைந்த இலங்கை அகதி,  முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என தெரியவந்துள்ளது. மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜீட் மயூரன் , மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மூன்றாம் தரப்பு நாட்டிற்கு செல்ல முயன்றபோது கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில்  மலேசிய...

0

காணாமல் ஆக்கப்பட்ட 500 பேரின் பட்டியலை ஐநா வெளியிட்டது!

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் 500 பேரின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் குழு வெளியிட்டுள்ளது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்படும் நபர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஐக்கிய நாடுகள் குழுவே இந்த பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும்...

0

சுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை – வெளியானது அதிர்ச்சி தகவல்!

சுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில் தற்கொலை செய்ய முயற்சித்த திருகோணமலையைச் சர்ந்த தங்கராசா கௌஷிகா ( வயது 29 ) என்ற பெண் உயிரிழந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை சிறையில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்து ஆபத்தான நிலையில் குறித்த பெண் அவசர சிகிச்சைப்...