சுனாமிக்கு பின்னரான முகாமைத்துவ கட்டமைப்பை தாபித்து 1860 நாட்கள் ஆகின்றன.
ஆழிப் பேரலை இடம்பெற்று இன்றுடன் 2040 நாட்கள் ஆகின்றன.
சாமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டு இன்றுடன் 3078 நாட்கள் ஆகின்றன.
நன்கொடைகள் மற்றும் கட்டணங்கள்
இலங்கை.com
ஆசிரியர் தலையங்கம்
Sinhala News
English News
QUICK LINKS
விளம்பரம்
உடனடி செய்திகள்
செய்திகள்
அரசில் இணையவே மாட்டாராம்! விஜயகலா எம்.பி கூறுகிறார்
14 யூலை 2010 22:45:45
அரசுடன் இணையும் நோக்கம் அவருக்கு அறவே கிடையாது என்று ஐ.தே.கவின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். அவர் அரசுடன் இணையப் போகிறாரா? என்று சந்தேகம் வெளியிட்டு தமிழ்-சி.என்.என் செய்தி பிரசுரித்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்திருந்த அமைச்சர் ரி.தயாரட்ண தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று ஐ. [ விரிவு ]
அரசில் இணையவே மாட்டாராம்! விஜயகலா எம்.பி கூறுகிறார்
14 யூலை 2010 22:45:45
அரசுடன் இணையும் நோக்கம் அவருக்கு அறவே கிடையாது என்று ஐ.தே.கவின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். அவர் அரசுடன் இணையப் போகிறாரா? என்று சந்தேகம் வெளியிட்டு தமிழ்-சி.என்.என் செய்தி பிரசுரித்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்திருந்த அமைச்சர் ரி.தயாரட்ண தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று ஐ. [ விரிவு ]
காங். சிமெந்து ஆலை எவருக்கும் வழங்கப்பட மாட்டாது : அமைச்சர்
14 யூலை 2010 18:18:39
காங்கேசன் சிமெந்து தொழிற்சாலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டுக்கோ அன்றி தனியார் எவருக்குமோ வழங்கப்பட மாட்டாது. வெகு விரைவில் சிமெந்து தொழிற்சாலையை இயக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும். இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அரச சொத்துடைமைகள் மற்றும் கைத்தொழில் அமைச்சர் பி.தயாரட்ன தெரிவித்தார். [ விரிவு ]
விளம்பரம்
செய்திகள்
கிளிநொச்சி மீள்குடியேற்ற மக்கள் - ஜனாதிபதி சந்திப்பு
14 யூலை 2010 18:16:49
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது கிளிநொச்சி விஜயத்தின் போது மீள்குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக சற்று முன்னர் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் குழுவினர் இணைந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். [ விரிவு ]
வேறுபாடுகளை மறக்க வேண்டும்-மஹிந்த
14 யூலை 2010 18:12:38
நாட்டின் வடக்கில் இருக்கும் மக்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து, அந்தப் பகுதியை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கை அமைச்சரவையின் கூட்டம் விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைமையகம் என்று கருதப்பட்ட கிளிநொச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பிறகு பொதுமக்களை சந்தித்த போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார். [ விரிவு ]
தர்ஷிகாவின் திடீர் மரணம் தொடர்பாக உரிய விசாரணை அவசியம்! யாழ் மாவட்ட பெண் எம்.பி கோரிக்கை
12 யூலை 2010 09:56:16
”வேலணை மத்திய மருந்தகத்தில் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிய இந்த இளம் பெண் அங்கு பணியாற்றிய வைத்தியரான பிரியந்த செனவிரட்ண என்பவரால் துன்புறுத்தப்பட்டு வந்திருக்கிறார். சனிக்கிழமை காலை இவரது சடலம் வைத்தியசாலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பாக பிரேதப் பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இந்த மரணத்தில் தற்கொலைக்கான சான்றுகள் காணப்படவில்லையென்று தெரிவித்துள்ளார். [ விரிவு ]
கண்டி வாவிக்கரை வீதியைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்
06 யூலை 2010 13:55:35
மூடப்பட்டுள்ள கண்டி வாவிக்கரை வீதியை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மல்வத்தை மகா நாயக்க தேரரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த கோரிக்கை மகஜர் ஒன்றை மகாநாயக்க தேரரிடம் கண்டி வர்த்தகர் சங்கம் இன்று கையளித்தது. கண்டி தலதா மாளிகைக்குக் குண்டு வைத்துத் தகர்க்க எடுத்த முயற்சியை அடுத்து அதன் ஒருபகுதி முற்றாக மூடப்பட்டு 15 வருடங்களுக்கு மேலாகிறது. [ விரிவு ]
டக்ளஸ் விஜயகலா பாராளுமன்றில் கடும் வாய்த்தர்க்கம். 100 மில்லின் மான நஷ்டம்.
03 யூலை 2010 15:16:28
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகால மகேஸ்வரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றது. வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த விஜயகால மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். [ விரிவு ]
டக்ளஸ் குழுவினருக்கு மகேஸ்வரனின் மனைவி கொடுத்த "நெத்தியடி" !
03 யூலை 2010 15:14:30
சிறிலங்கா நாடாளுமன்றில் உரையாற்றிய ஐ.தே.வின் யாழ். மாவட்ட உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் உரையை குறிக்கிட்டு குழைப்பிய டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பியினருக்கு விஜயகலா மகேஸ்வரன் தக்க பதிலடி கொடுத்து தலைகுனிய வைத்துள்ளார் என்று நாடாளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- நேற்று பிற்பகல் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விஜயகலா மகேஸ்வரினின் உரைக்கான நேரத்தில் அவர் உரை நிகழ்த்தினார். [ விரிவு ]
தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை!
29 யூன் 2010 20:36:22
உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது . இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது. [ விரிவு ]
விளம்பரம்
கடந்த ஆசிரியர் தலையங்கங்கள்
ஊடகர்களுக்கு அரசின் அழைப்பு!
13 மார்ச் 2010 16:59:29 Editor - Uthayan
இலங்கை அரசின் எதேச்சாதிகாரப் போக்குக்கு எதிரான மேற்குலகின் கடும் நிலைப்பாடு வெளிப்படையாகத் தோற் றும் விவகாரம். அது மறைக்கப்படக்கூடியதல்ல. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட்ட ஐரோப்பிய நாடு கள் போன்றவை இலங்கையில் அதிகார வர்க்கத்தின் ஆசியு டன் அரங்கேறும் மனித உரிமை மீறல் செயற்போக்குக்கு எதிராகச் சீறத் தொடங்கிவிட்டன. [ விரிவு ]
நாட்டின் பொருளாதாரத்துக்கு இப்போதைக்கு மீட்சி இல்லை
11 மார்ச் 2010 20:52:36 Editor - Uthayan
இலங்கையில் "மஹிந்த சிந்தனை' பொருளாதாரம் எவ் வாறு நாட்டைக் குட்டிச்சுவராக்கி சீரழிக்கின்றது என் பதை பிரபல பொருளாதார ஆய்வாளர் ஹர்ஷா டி சில்வா நார் நாராய்க் கிழித்துக் காட்டியிருக்கின்றமை பற்றி சில தினங்களுக்கு முன்னர் இப்பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம். தவறான நிர்வாகம், வீண் விரயம், ஊழல், மோசடி போன்றவை காரணமாகவே கடந்த வருடம் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபா நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டதாக அவர் வெளிப்படுத்தியிருந்தார். [ விரிவு ]
"மஹிந்த சிந்தனை'ப் பொருளாதாரத்தில் கடனை அடைப்பதற்குப் புதிய கடன்!
10 மார்ச் 2010 06:52:46 Editor - Uthayan
இலங்கையின் "மஹிந்த சிந்தனை' பொருளா தாரத்தை ஒரு பிடி பிடித்து, கிழித்திருக்கின்றார் பிரபல பொருளியல் ஆய்வாளரான ஹர்ஷா டி சில்வா. "மஹிந்த சிந்தனை' அரசின் தவறான நிர்வாகம், வீண் விரயம் போன்றவை காரணமாக கடந்த வருடத் தில் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருப்ப தாக அவர் விசனம் தெரிவித்திருக்கின்றார். இந்த வீண் விரய இழப்பினால் இலங்கையில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தின் மீதான கடன் சுமைப் பளு சராசரியாக ஒரு லட்சம் ரூபாவினால் உயர்ந்திருக் கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். [ விரிவு ]
தமிழ்க் கூட்டமைப்பின் நிலைமை....
09 மார்ச் 2010 06:54:37 Editor
இரண்டு நாள் விஜயமாகக் கொழும்புக்கு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ், தமது பயணத்தை முடித்துக்கொண்டு புதுடில்லி திரும்பிவிட்டார். தமது கொழும்பு விஜயத்தின் போது இலங்கை ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ உட்படப் பல தரப்பினரையும் அவர் சந்தித்துப் பேசியிருந்தார். இந்தச் சந்திப்புகளில், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை, அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோடு நடத்திய பேச்சுகளே முக்கியமானவையாகும். [ விரிவு ]
தேர்தல் வன்செயல் நச்சுமரம்...!
07 மார்ச் 2010 07:05:36 Editor
நாடாளுமன்றத்துக்கு அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தலுக்கு  வேட்புமனுக் களைத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் கடந்த மாதம் 26ஆம் திகதி ஆகும். அன்றிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை வரை  அதாவது ஒரு வார காலத் தில்  பெரியளவிலான பதினாறு தேர்தல் வன்செயல் கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தப் பொதுத் தேர்தலில் எத்துணை வன்முறை கள் நடைபெறப்போகின்றனவோ  எண்ணுக்கணக் குக்கு அப்பாற்பட்டு விஞ்சிவிடுமோ  என்ற அச் சத்தை இந்த ஆரம்பக் கணக்கு உண்டாக்குகிறது. [ விரிவு ]
உலகதமிழ்
200 அகதிகளுடனான கப்பல் கனடா கரையை அண்மிக்கிறது: உறுதிப்படுத்துகிறது அமெரிக்கா
25 யூலை 2010 11:41:20
உலகின் பார்வையையே தன்பக்கம் திருப்பி கடந்த நான்கு மாதங்களாக இங்கே நிற்கிறது, அங்கே நிற்கிறது என ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட தாய்லாந்தில் பதியப்பட்ட கப்பல் கனடாவின் கரையை எப்போதும் அடையலாம் என அமெரிக்க பசுபிக் பிராந்திய கடற் கண்காணிப்புப் பிரிவு உறுதி செய்துள்ளது. விடுதலைப்புலிகளின் கப்பல் என இலங்கை அரசாலும் மேற்குலக ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்ட இக்கப்பலில் அகதி அந்தஸ்துக்கோரும் 200க்கு மேற்பட்டோர் பயணிக்கிறார்கள் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன. [ விரிவு ]
இலங்கையருக்கு அகதி அந்தஸ்து இனி இல்லை : ஐநா அகதிகள் ஸ்தாபனம்
06 யூலை 2010 10:17:55
இலங்கையர்களுக்கு இனிமேலும் அகதி அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து தற்பொழுது அமைதி சூழ்நிலை நிலவுவதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஏப்ரல் மாதம் அகதிகள் அந்தஸ்து கோரிக்கையை அவுஸ்திரேலியாவும் நிராகத்திருந்தது. [ விரிவு ]
இலங்கைத் தமிழரின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்- முதலமைச்சர் கருணாநிதி
27 யூன் 2010 18:00:30
இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து துன்ப, துயரங்களுக்கு ஆளாக்கப்படுவதும், இவர்களின் மீள் குடியேற்றம் மற்றும் மீள்குடியேற்றப்பட்டு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்பையும், நல் வாழ்க்கையும் ஏற்படுத்த உறுதியளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் சற்றுமுன் தெரிவித்தார். [ விரிவு ]
இலங்கையின் எதிர்காலத்திற்கு மனித உரிமை விவகாரங்கள் அவசியம் தேவை : அமெரிக்கா
27 யூன் 2010 14:31:53
இலங்கையின் எதிர்கால நலனுக்கு மனித உரிமை விவகாரங்கள் மிகவும் அவசியம் தேவை என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஸ்திரமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. . நாட்டு மக்களுடனான உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளதென அமெரிக்கா பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளதென ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பி. [ விரிவு ]
இலங்கைத் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து மத்திய அரசை தி.மு.க வலியுறுத்த வேண்டும்-ஜெயலலிதா
27 யூன் 2010 09:51:12
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை ஐ.நா.சபை உட்பட உலகத்திலுள்ள அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. இவற்றையெல்லாம் இந்திய அரசு மேற்கொள்ள மத்திய அரசை தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி வற்புறுத்த வேண்டும். அத்துடன் இலங்கை அரசுக்கு மத்திய அரசால் கொடுக்கப்பட்ட 1500 கோடி ரூபா பணம் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்று மத்திய அரசாங்கம் கண்காணிக்க வேண்டும் என்று அ. [ விரிவு ]
இலங்கை சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் தொடர்பான தீர்மானம் விரைவில் - ஜூலியா கில்லார்ட்
27 யூன் 2010 09:49:41
இலங்கை சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை குறித்தத் தீர்மானம் அடுத்த மாதம் 8ஆம் திகதியளவில் முன்னெடுக்கப்படும் என அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். [ விரிவு ]
தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர்
24 யூன் 2010 16:02:30
தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போதெல்லாம், நான் ஏன் தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு வந்ததுண்டு என்று ஜெர்மனிய பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை பேராசிரியை கூறினார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று இடம்பெற்ற தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கேற்ற வெளிநாடு வாழ் தமிழ் அறிஞரும் ஜெர்மனிலுள்ள 'ஜூகொலின்' பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை தலைவருமான வுல்ரிக் நிக்லஸ் என்பவரே இவ்வாறு தெரிவித்தார். [ விரிவு ]
புலம்பெயர் இலங்கை தமிழர்கள் விசுவாசமாக நடக்கின்றனர்:பா.சிதம்பரம்
13 யூன் 2010 09:37:26
புலம் பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள் அந்நாடுகளுக்கு விசுவாசமாக நடக்கின்றனர் எனவும் அந்நாடுகளின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கின்றார்கள் எனவும் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் கூறியுள்ளார். காரைக்குடியில் உள்ள குன்றக்குடி அடிகளார் பெண்கள் கல்வியல் கல்லூரியில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு ஈழத் தமிழ்ர் பிரச்சினை குறித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். [ விரிவு ]
வரலாறு
புராதன இலங்கையில் பௌத்த பிக்குகளும் பௌத்த சங்கமும்
05 ஏப்ரல் 2010 11:13:36
பௌத்தர்களின் வழிபாட்டு மையமாக தூபிகளும், விகாரைகளும் விளங்குகின்றன. சிறப்பாகத் தூபி வழிபாட்டு இடமாகவும், விகாரை பௌத்த துறவிகள் தங்குகின்ற இடமாகவும், கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மையமாகவும் காணப்படுகின்றது. பாளிஇலக்கியங்கள் தேவநம்பியதீச மன்னன், மகிந்ததேரரும் அவரது குழுவினரும் தங்குவதற்காக மகாவிகாரையைக் கட்டிக்கொடுத்தான் எனக் கூறுகின்றன. [ விரிவு ]
குடாநாடு
01 ஏப்ரல் 2010 11:09:13
யாழ்ப்பாணம் என்பது இந்தியாவில் இருந்து தென் கிழக்கே 36 மைல் தூரத்தில் இலங்கைத்தீவின் வட கோடியில் உள்ள ஒரு குடா நாடாகும். மூன்று பக்கம் கடலாலோடும் ஒரு பக்கம் தரையோடும் தொடர்புபட்டதால் அதை குடாநாடு என்று அழைக்கிறார்கள். யாழ்ப்பாணம் வடக்கில் பாக்கு நீரிணைக் கடலையும், கிழக்கில் வங்காளவிரிகுடாக் கடலையும், தெற்கே பூநகரி கடலையும் எல்லையாகக் கொண்டுள்ளது. [ விரிவு ]
தரைஅமைப்பும் தோற்றம்
01 ஏப்ரல் 2010 11:07:20
யாழ்ப்பாணத்தின் தரைஅமைப்பு கடல் மட்டத்தில் இருந்து 9 அடி உயரத்தில் உள்ளதுடன் 40 அடி என்ற ஆகக்கூடிய உயரத்தில் கீரிமலை உள்ளது. யாழ்ப்பாணம் என்றால் அதன் தரைத்தோற்றம், புவியியல் அமைப்பு, சமுக அமைப்பு, வரலாறு, பண்பாடு என பல பிரிவுகள் முக்கியமாக உள்ளடக்கப்பட வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவும் இலங்கைத்தீவும் தற்போது இந்து சமுத்திரத்தில் அமிழ்ந்து கிடக்கின்ற பெரு நிலப்பரப்பான லெமூரியா கண்டம் எனும் பகுதிகளாக விளங்கின என்று புவியியல் மற்றும் கடலியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். [ விரிவு ]
காரணப்பெயர்
01 ஏப்ரல் 2010 11:05:53
யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதை நாம் ஆராய்ந்தால் யாழ் இசைக்கருவிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உணர முடியும். சோழ நாட்டில் இருந்து வந்த பாணன் ஒருவன் ஜெயதுங்கராசன் முன்னிலையில் யாழை வாசித்து மகிழ்வித்தமையால் மணற்றியின் தென்மேற்கு பாகத்தை பரிசாகப் பெற்றான். பரிசாகப் பெற்ற பிரதேசம் காடாக காட்சியளித்ததாம். [ விரிவு ]
நாகர்களின் செல்வாக்கு
01 ஏப்ரல் 2010 11:03:00
இலங்கையின் ஆதிவாசிகளான நாகர்கள், இலங்கையின் வட பகுதியிலும் மேற்கிலும் வசித்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடம் நாகதீபம் என்று அழைக்கப்பட்டது. இலங்கையின் வட பாகத்தில் நாகர்கள் வசித்த காரணத்தாலே யாழ்ப்பாணத்தின் ஆதிக்குடிவாசிகளாக நாகர்களைக் குறிப்பிடுகிறார்கள். முற்காலத்தில் நாகர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கம் பெற்றிருந்தார்கள். [ விரிவு ]
லம்பகர்ணர் ஆட்சி
01 ஏப்ரல் 2010 11:01:34
விஐயன் பிறப்பதற்கு முன்னரே இலங்கை ஒரு சிறந்த குடியேற்ற நாடாக விளங்கியது என்று டொக்டர் போல் பீரிஸ் கூறியுள்ளார். விஐயன் நகுலேஸ்வர ஆலயத்தை புதிப்பித்தான் என்றும், திருமூலர் இலங்கையை சிவபூமி என்று கூறியதாலும் மிகப்பழைய காலத்தில் தமிழர்கள் இங்கே குடியேறினார்கள் என்று கருதுவதற்கு இடமுண்டு. அப்படியானால் அவர்கள் யார்? அவர்கள் தென்னிந்திய கீழைக்கரையோரங்களில் ஆதிக்கம் செலுத்திய கள்ளர்கள் என்ற சாதியாகும். [ விரிவு ]
மலையாளக் குடியேற்றங்கள்
01 ஏப்ரல் 2010 11:00:03
யாழ்ப்பாணத்தில் முதலில் குடியேறியவர்கள் சேரநாட்டில் இருந்து வந்த மலையாளிகள் என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்தாகும். கேரள நாட்டை விட்டு வெளியேறிய மலையாளிகளில் சிலர் 20 மைல் அகலமுடைய பாலைக்காட்டு கணவாய் ஊடாக வந்து, வியாபாரப்பாதையை அடைந்து, யாழ்ப்பாணம் சென்று அங்கு குடியேறினார்கள். சிலர் அதே கணவாய் ஊடாகச் சென்று கொல்லிமலை, பச்சைமலை, சவ்வாதுமலைகளில் மறைமுகமாக குடியேறி வாழ்ந்தார்கள். [ விரிவு ]
தொண்டைநாட்டு குடியேற்றங்கள்
01 ஏப்ரல் 2010 10:58:44
தென்னிந்தியாவின் தொண்டை நாட்டுக் குடியேற்றங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன என்பதற்கு சான்றுகள் உள்ளன. கச்சி என்று சொல்லப்படுகின்ற தொண்டைநாட்டுப் பெயரோடு கச்சினாவடலி சுன்ணாகத்திலும், காரைக்கால் என்ற பெயரோடு காரைதீவு, காரைக்காடு, காரைக்கால் என்று இணுவில் பகுதியிலும், உடுப்பூர் என்ற பெயரோடு உடுப்பிட்டி என்றும், காஞ்சி என்ற பெயரோடு காஞ்சிக்கோட்டம் என்றும், சோழிங்கன் என்ற பெயரோடு சோழங்கன் என்றும், தொண்டை என்ற பெயரோடு தொண்டைமானாறு, தொண்டைமான்தோட்டம் என்றும் மயிலம் என்ற பெயரோடு மயிலம்காடு என்றும் தொண்டைநாட்டுக் குடியேற்றங்கள் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டுள்ளன. [ விரிவு ]
தாய் நிலம்
மாதகல்
01 ஏப்ரல் 2010 10:51:25
அலைகளுக்கு தெரியும் கடலின் ஆழம். ஒவ்வவொருவர் சிந்தும் கண்ணீர் கறைகளில் தெரியும் பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும். “தாய்மை என்றால் புனிதம். தாய் நிலம் என்றால் இனிமை. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் நகரத்தையும் பற்றி வரலாற்றுப்பதிவுகளோடு தாய் நிலம் பகுதியூடாக நாம் சந்திக்கிறோம். இலங்கையின் வட பாகத்தில் உள்ள யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 16 கிலோ மீற்றர் தூரத்தில் மாதகல் கிராமம் அமைந்துள்ளது. [ விரிவு ]
வியாபாரிமூலை
01 ஏப்ரல் 2010 10:50:18
பருத்தித்துறையிலிருந்து மேற்காக காங்கேசன்துறை நோக்கி நீளும் கடற்கரையோர வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்று மாலிசந்தி நோக்கி கிளைவிடும் தார் வீதியில் திரும்ப வருவது வியாபாரிமூலையெனும் அமைதியான கிராமம். கடற்கரையிலிருந்து வீரபத்திரர் கோவில் வளைவு வரை வீதியின் இருமருங்கும் கிளைவிடும் சிறு சிறு ஒழுங்கைகளும், வீதிகளும் அங்கு வசிக்கும் அனைவருக்குமிடையிலான உறவுவை ஒருங்கிணைக்கும். [ விரிவு ]
மட்டுவில்
01 ஏப்ரல் 2010 10:48:46
மட்டுவில் என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் 'மட்டு' என்பது தேன் என்ற பொருளைக் கொடுக்கிறது.'வில்' என்பது குளம் என்ற பொருளில் நீர் நிலைகளை குறிக்கிறது. இப்பிரதேசத்தில் தாமரைப் பொய்கைகள் பல காணப்பட்டன. இவ்வாறு தேனும் பொய்கையும் சேர்ந்து தேன்பொய்கை என்று பொருள்பட மட்டுவில் விளங்குகிறது. இக்கிராமம் முன்பு காடாக இருந்ததால் இங்கு தேன் அதிகமாக சேகரிக்கப்பட்டதென்றும் கூறுவர். [ விரிவு ]
நயினாதீவு
01 ஏப்ரல் 2010 10:46:50
யாழ்ப்பாணக் குடாநாடும் அதனை அடுத்துள்ள ஒவ்வொரு சிறு தீவுகளும் புராதனப் பெருமை வாய்ந்தனவாகக் கருதப்படுகிறது. லைடன் தீவு, காரைதீவு, எழுவைதீவு, அனலைதீவு,நயினாதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு எனும் சப்த தீவுகளுக்கு நடுநாயகமாக நயினாதீவு அமைந்துள்ளது. இது யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவுக்கு செல்லும் கடற்பாதையில் தென் மேற்குத் திசையில் 20 மைல் தொலைவில் உள்ளது. [ விரிவு ]
வரம் தரும் ஆலயம்
நல்லூர்க் கந்தசுவாமி கோவில்
01 ஏப்ரல் 2010 10:44:04
சைவத்துக்கும் தமிழுக்கும் பெயர் பெற்ற யாழ்ப்பாணத்தில் பல வரலாற்றுத் தொன்மைமிக்க ஆலயங்கள் உள்ளன. எம்மவர்கள் எத்திசை சென்றாலும் பக்தியோடு வணங்கும் ஆலயங்கள் பற்றிய தகவல்களை சுவையோடு தருகிறோம். இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் விளங்கிய இடம் நல்லூர். [ விரிவு ]
மட்டுவில் பன்றிதலைச்சி அம்மன் கோவில்
01 ஏப்ரல் 2010 10:42:40
உலகமெலாம் சக்திமயம்.எனவே சக்தி வழிபாடு பற்றியும், முடிவே இல்லாமல் அகிலமெலாம் அருள்பாலிக்கும் அன்னையின் அருள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் மிகவும் தொன்மை வாய்ந்த மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் பற்றித் தருகிறோம். காரணப் பெயர் இவ் ஆலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத் தொழிலையும் செய்து வந்தான். [ விரிவு ]
மட்டுவில் பன்றிதலைச்சி அம்மன் கோவில்
01 ஏப்ரல் 2010 10:42:40
உலகமெலாம் சக்திமயம்.எனவே சக்தி வழிபாடு பற்றியும், முடிவே இல்லாமல் அகிலமெலாம் அருள்பாலிக்கும் அன்னையின் அருள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் மிகவும் தொன்மை வாய்ந்த மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் பற்றித் தருகிறோம். காரணப் பெயர் இவ் ஆலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத் தொழிலையும் செய்து வந்தான். [ விரிவு ]
சைவமும் நந்தீஸ்வரமும்
01 ஏப்ரல் 2010 10:41:25
சைவ மதத்தில் நந்தீஸ்வரர் முக்கியமானதோர் இடத்தைப் பெற்றிருக்கிறார். அவருக்கு நந்தி தேவர், நந்திகேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. நந்தீஸ்வரர் சிவனின் அம்சமானவர். அவரே சிவபெருமான் எனவும் கூறுவர். அவர் சிவ கணத் தலைவர். நந்தி எனில் இடபம் எனவும் கொள்வர். இடபம் சிவபெருமானின் வாகனமாகும். விடை ஏறிய பெருமான் என்பது தர்மத்தை வாகனமாக்கிய இறைவன் என்று பொருள். [ விரிவு ]
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில்
01 ஏப்ரல் 2010 10:40:17
ஆலயம் என்பது ஆன்மாக்களுக்கு அனுக் கிரகத்தைக் கொடுக்கக் கூடிய இறைவன் வாழுகின்ற இடமாகும். ஈழத்திலே திருமாலை முழு முதற் கடவுளாகப் போற்றுகின்ற வைணவ வழிபாடு தனிச் சமயப் பிரிவாக போற்றப்படுவதில்லை. ஆனாலும் திருமால் கோவில்கள் சில ஈழத்தில் காணப்படுகின்றன. அவற்றுள் ஒரு கோவிலாக யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் விளங்குகிறது. [ விரிவு ]
கைப்பக்குவம்
யாழ்ப்பாணத்து கூழ்
01 ஏப்ரல் 2010 10:38:41
யாழ்ப்பாணத்து தமிழர்களின் அடையாளங்களில் உணவுக்கு முக்கிய இடம் உள்ளது. சுவையான யாழ் சமையல் முறைகள் தற்போது மாற்றம் அடைந்து வருவதுடன் புழக்கத்தில் இருந்து இல்லாமல் போவதும் கவலைக்குரிய ஒரு விடயமாகும். கூழ், கஞ்சி, களி போன்ற தமிழர்களுக்கே உரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பதை எம்மவர்கள் மறந்து விட்டார்கள். எங்களின் கலாசார விழுமியங்களோடு கைகோர்க்கும் யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பாரம்பரிய யாழ் சமையல் முறைகள் கைப்பக்குவம் பகுதியில் இடம்பெறும். [ விரிவு ]
வெண்டிக்காய் வெள்ளைக்கறி
01 ஏப்ரல் 2010 10:37:33
தேவையான பொருட்கள் பிஞ்சு வெண்டிக்காய் - 15 பச்சைமிளகாய் - 4 சின்ன வெங்காயம் - சிறிதளவு தேங்காய்ப்பால் - 1 கப் கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு தேசிக்காய் சாறு - 1 மேசைக்கரண்டி செய்முறை 1. வெண்டிக்காயை நன்றாகக் கழுவி அடி மற்றும் நுனி இரண்டையும் வெட்டி எடுக்கவும். 2. வெண்டிக்காய்களை 2 சென்ரி மீற்றர் என்ற ஒரே அளவில் வெட்டி கழுவிய மண் சட்டியில் போடவும். [ விரிவு ]
பொரித்து இடித்த தேங்காய் சம்பல்
01 ஏப்ரல் 2010 10:36:03
தேவையான பொருட்கள். துருவிய தேங்காய்ப்பூ - 2 கப் செத்தல் மிளகாய் - 12 சின்ன வெங்காயம் - சிறிதளவு தாளிப்பதற்கு - வெங்காயம், செத்தல் மிளகாய், கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியன சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை 1. காம்பு கிள்ளிய செத்தல் மிளகாய்களை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 2. பொரித்த மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை மட்டும் சேர்த்து அரைக்கவும். [ விரிவு ]
கோவா வறை
01 ஏப்ரல் 2010 10:31:56
யாழ்பாணத்து மக்களின் மதிய உணவுக்கான மரக்கறி வகைகள் முக்கியமாக இரண்டு வகைப்படும். அவையாவன. 1. மச்ச உணவுக்கான மரக்கறிகள் 2. சைவ உணவுக்கான மரக்கறிகள் குறிப்பிட்ட சில மரக்கறிவகைகள் மாத்திரம் சைவ மற்றும் அசைவ வகையான உணவு முறைக்கும் பயன்படுத்தப்படும். அவற்றில் ஒரு மரக்கறிதான் கோவா. இக்கோவா வறை சைவ மற்றும் அசைவ மதிய நேர உணவுக்கு பொருத்தமானது. [ விரிவு ]
பாரம்பரியம்
புதிர் எடுத்தலும் பொங்கலும்
01 ஏப்ரல் 2010 10:30:34
யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மக்களின் உணவுக்கான தேவையில் பெரும்பகுதி விவசாயம் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. தழிழர் திருநாளாம் தைத்திருநாளில் புதிய நெல், கொண்டு புதுப்பானையில் பொங்கல் பொங்கி உழவுக்கு உதவிய சூரியனுக்கு படைத்து வணங்குவது தமிழர் மரபாகும். தமிழில் முதலாம் திகதியை தைப்பொங்கல் தினமாக கொண்டாடும் வழக்கம் தொன்றுதொட்டு தமிழர்களிடையே உள்ளது. [ விரிவு ]
பொன்னுருக்கல் - மண்ணின் மரபு
01 ஏப்ரல் 2010 10:29:07
திரு என்பது தெய்வத் தன்மை எனவும், மணம் என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு மேன்மையுடன் கூடிய தெய்வ கடாட்சம் பொருந்திய இணைதல் 'திருமணம்' எனப்படுகின்றது. யாழ்ப்பாணத்து தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் பல சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுவது வழக்கம். திருமண நாளுக்கு முன்பு பொன்னுருக்கலுக்கு நிச்சயித்த சுபநாளில் மணமகன் வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறுவது மரபாகும். [ விரிவு ]
நிறைந்த வாழ்வைக் கொடுக்கும் நிறைகுடம்
01 ஏப்ரல் 2010 10:27:28
யாழ்ப்பாணத்து தமிழர்களின் சடங்குகள் ஆகம மரபுடன் பல சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுவது வழக்கம். சுப நாளில் வீட்டு வாசலில் நிறை குடம் வைத்து அருகில் குத்து விளக்குகள், பன்னீர்ச் செம்பு, விபூதி, குங்குமப் பூ மற்றும் சந்தணம் ஆகியவற்றை வைக்க வேண்டும். நிறைகுடம் வைக்கத் தேவையான பொருட்கள் 1.நிறை குடம் 2.சாணம் அல்லது மஞ்சள் (பிள்ளையார் பிடிப்பதற்கு) 3. [ விரிவு ]
தறியில் இழைத்து வெட்டபடும் வேட்டி
01 ஏப்ரல் 2010 10:26:00
வேட்டி என்பது தமிழர்களுக்கே உரித்தான தனித்துவமான ஆடையாக உள்ளது. இதை தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் என்றும் குறிப்பிடலாம். சேலை அணிதல் தமிழ்ப் பெண்களுக்கு எவ்விதம் கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மரபு வழிப்பட்டதாகவும் உள்ளதோ அவ்விதம் வேட்டி அணிதல் ஆண்களுக்கு முக்கியமானதொரு பண்பாட்டுச் சின்னமாக விளங்கி வந்துள்ளது. [ விரிவு ]
பாதங்களுக்கு அழகு சேர்க்கும் கொலுசும் மெட்டியும்
01 ஏப்ரல் 2010 10:24:42
அழகு உணர்வு கொண்ட மக்கள் தம்மையும் தம்மைச் சார்ந்த பொருட்களையும் கவர்ச்சிக்காக பெரிதும் அணி செய்து கொள்கிறார்கள். புறத்தே அணிசெய்யப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பலவற்றுள் பொன்னாலும் மணியாலும் உருவான ஆபரணங்களே ஒளி தந்து நெடிது நிற்பதுடன் மங்கலச் சிறப்பும் மிக்கவை. அணி செய்யப் பயனபடுத்தப்படும் ஆடகம், சாம்புநதம், கிழிச்சிரை, சாகரூபம் ஆகிய நான்கும் தங்கத்தின் வகைகளாகும். [ விரிவு ]
மறந்தவையும் மறைந்தவையும்
01 ஏப்ரல் 2010 10:20:31
யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கோலங்கள் என்பதை நோக்குவதற்கு முன்னர் பண்பாடு என்றால் என்ன என்பதை வரையறை செய்து கொள்வது அவசியமாகும். பண்பாடு பற்றிய ஆய்வினை மேற்கொண்ட மேலைப்புல அறிஞர்கள் 160க்கும் மேற்பட்ட வரையறைகளைத் தொகுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுள் எமக்குப் பொருத்தமான சிலவற்றை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். [ விரிவு ]
அர்த்தமுள்ள திருமணம்
01 ஏப்ரல் 2010 10:17:40
திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் சடங்காகக் கருதப்படுகிறது. திருமணம் என்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது. திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத் தன்மை என்ற பொருளைக் கொண்டது. இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வத்தின் செயலாகக் கருதப்படுகிறது. புலப்படாமல் அரும்பாக மறைந்திருந்த தெய்வத்தின் பங்கு மலர்ந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது அங்கே தெய்வீக மணம் கமழ்கிறது. [ விரிவு ]